அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் 2ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தோல்வியடைந்தார்.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி கண்டார். அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 7-6(7-4), 2-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் 9ஆம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸை வீழ்த்தினார். இதன் மூலம் மேத்வதேவ் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-1, 6-3, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் 2ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 6-3, 6-4 என்ற நேர் செட்டில், செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்திஅரை இறுதி சுற்றில் கால்பதித்தார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 15ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் குயின்வென்ஜெங், 75ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனா கலின்ஸ்காயாவுடன் மோதினார். இதில் குயின் ஜெங் 6-7(4-7), 6-3, 6-1 என்றசெட் கணக்கில் வெற்றி பெற்றுஅரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவருக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அவுஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி 6-4, 7-6(7-5) என்ற நேர் செட்கணக்கில் அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சலஸ், ஆண் ட்ரெஸ்மோல்டெனி ஜோடியை வீழ்த்திஅரை இறுதிக்கு முன்னேறியது. தொடரின் ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சி தோல்வி கண்டார். அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 7-6(7-4), 2-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் 9ஆம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸை வீழ்த்தினார். இதன் மூலம் மேத்வதேவ் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-1, 6-3, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் 2ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 6-3, 6-4 என்ற நேர் செட்டில், செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்திஅரை இறுதி சுற்றில் கால்பதித்தார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 15ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் குயின்வென்ஜெங், 75ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனா கலின்ஸ்காயாவுடன் மோதினார். இதில் குயின் ஜெங் 6-7(4-7), 6-3, 6-1 என்றசெட் கணக்கில் வெற்றி பெற்றுஅரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவருக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அவுஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி 6-4, 7-6(7-5) என்ற நேர் செட்கணக்கில் அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சலஸ், ஆண் ட்ரெஸ்மோல்டெனி ஜோடியை வீழ்த்திஅரை இறுதிக்கு முன்னேறியது.
Leave Comments