2வது ரி20 போட்டியில் இலங்கையை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது சிம்பாவே.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ரி20போட்டியில் சிம்பாவே அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாவே அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும், மத்யூஸ் 66 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் முசர்வானி மற்றும் ஜொங்வே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதற்கமைய 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணி சார்பில் கிரேக் எர்வின் அதிகபட்சமாக 70 ஓட்டங்களையும், ஜொங்வே மற்றும் பென்னட் ஆகியோர் தலா 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தீக்சன மற்றும் சமீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட ரி20 ஓவர் தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இலங்கை மற்றும் சிம்பாவே அணியும் சமநிலையில் உள்ளன.
Leave Comments