பிரேதபரிசோதனையின் போது உயிரிழந்தவரின் நுரையீரலில் பல் கண்டுபிடிக்கப்பட்டது.
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது 59 வயதுடைய நபரொருவரின் நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நபர் சில காலமாக நிமோனியா மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
பலாங்கொடை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக பலாங்கொடை அவசர மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார்.
பலாங்கொடை பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலேபொட பகுதியைச் சேர்ந்த எஸ். கருணாரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
அந்த நபர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், நிமோனியா நோய் தீவிரமடைந்ததால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில வருடங்களுக்கு முன்னர் அவரது வாயிலிருந்து பல் ஒன்று விழுந்து, அது நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Leave Comments