உலகின் வயதான நாய் போபி தானா என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து, கின்னஸ் சாதனை புத்தகத்திலிருந்து அதன் பெயர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உயிரிழந்த போபி (Bobi) உண்மையிலேயே உலகின் மிக வயதான நாயா என்று சந்தேகம் எழுந்துள்ளது. வரலாற்றில் அதுவே மிக வயதான நாய் என்று கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகம் தெரிவித்திருந்தது. சந்தேகம் எழுந்த பின்னர் அதற்கு வழங்கப்பட்ட பட்டத்தைத் தற்காலிகமாக இரத்து செய்திருப்பதாக கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு கூறியது. 31 ஆண்டுகள், 165 நாள்கள் போர்த்துக்கல்லில் வாழ்ந்துவந்த போபி சென்ற ஆண்டு (2023) ஒக்டோபர் மாதம் உயிரிழந்திருந்தது. "கண்டுபிடிப்புகள் உறுதிசெய்யப்படும்வரை பாபிக்கு வழங்கப்பட்ட பட்டங்களைத் தற்காலிகமாக ரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம்,' என்று அமைப்பு AFP செய்தியிடம் கூறியது. சந்தேகம் எழுந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
Leave Comments