எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் விநியோகித்துக் கொண்டிருந்த போது தீ விபத்து நிகழ்ந்தது.
கெஸ்பேவ நகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சேமிப்பு தாங்கிக்கு எரிபொருயை விநியோகித்துக் கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இன்று பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது. பெட்ரோலை ஏற்றிச் சென்ற பவுசர், எரிபொருள் சேமிப்பு தாங்கி அருகே நிறுத்தி எரிபொருளை விநியோகித்துக் கொண்டிருந்த போது, தாங்கியின் இரும்புக் குழாயில் பவுசரின் குழாய் மோதி பதினைந்து அடி உயரத்திற்கு பாரிய தீ பரவியது. உடனடியாக அங்கிருந்து பவுசர் அகற்றப்பட்டு, தீ கட்டுப்படுத்தப்பட்டது.
Leave Comments