செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

கண் மை... வீட்டிலேயே தயாரிக்கலாம் எளிமையாக, இயற்கையாக!

மஞ்சள் கரிசலாங்கண்ணி - விளக்கெண்ணெய் இவை இரண்டும் சேரும்போது சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள 96 வகையான மருத்துவப் பிரச்னைகளை குணமாக்கும் மற்றும் வராமல் தடுக்கும் ஆற்றலும் கிடைத்துவிடும்

ad

news-details

`கண்ணுக்கு மை அழகு' என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இன்று காஜல் பென்சில், ஐலைனர், மஸ்காரா என்று கண் அலங்காரத்துக்கு எத்தனையோ காஸ்மெட்டிக் பொருள்கள் வந்துவிட்டன. ஆனால், நாம் பாரம்பர்யமாகப் பயன்படுத்தி வரும் கண் மை, அழகுடன் ஆரோக்கியத்துக்கும் உகந்தது. அந்தக் கண் மையை, நம் வீட்டிலேயே எளிமையாக, இயற்கையாகத் தயாரிக்கலாம். கண்ணுக்குக் குளிர்ச்சியையும் அழகையும் தரக்கூடிய கண் மையை எப்படித் தயாரிப்பது என்பது குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் விளக்குகிறார் சித்த மருத்துவர் காமராஜ். “இன்று கண்ணுக்குப் பல காஸ்மெட்டிக் பொருள்கள் பயன்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவை ரசாயனங்களால் செய்யப்படுபவை. எனவே, சிலருக்கு அலர்ஜியையும், நீடித்த பயன்பாட்டின்போது சிலருக்கு பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். மாறாக, விளக்கெண்ணெயில் செய்யப்படும் நம் பாரம்பர்ய மை, கண்ணுக்கு மருந்துபோல என்றே சொல்லலாம். அதைத் தயாரிக்க நீங்கள் தயாரா? கண் மை செய்யத் தேவையான பொருள்கள்: மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை தேவையான அளவு, பாதாம் பருப்பு ஒன்று, சிறிய அளவில் காடாத் துணி (புதியது, தண்ணீரில் அலசிக் காயவைத்தது), விளக்கெண்ணெய் 50 மி.லி, சிறிய அகல் விளக்குகள் இரண்டு. செய்முறை: மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையுடன் ஒரு பாதாமைச் சேர்த்து அரைத்து, 50 மி.லி அளவுக்குச் சாறு எடுத்துவைத்துக்கொள்ளவும். அந்தச் சாற்றில் காடாத் துணியை நனைத்து, நன்றாகக் காயவைக்கவும். காய்ந்த காடாத் துணியை எடுத்துத் திரிபோலத் திரிக்கவும். ஓர் அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி, செய்து வைத்துள்ள திரியைப் போட்டு விளக்கேற்றவும். மற்றோர் அகல் விளக்கை, எரிகின்ற தீபச்சுடரில் கவிழ்த்தபடி வைத்து, அதில் தீபத்தின் புகைக்கரியைச் சேகரிக்கவும். சேகரித்த கரியை சின்ன ஸ்பூன் கொண்டு எடுத்து, அதனுடன் தேவையான அளவு விளக்கெண்ணெய் கொண்டு குழைத்து எடுக்கவும். இதனை வெள்ளி அல்லது செம்புச் சிமிழில் சேர்த்து வைத்துக் கண் மையாகப் பயன்படுத்தலாம். பலன்கள்..! இந்தக் கண் மையைத் தொடர்ந்து பயன்படுத்தி வர, மஞ்சள் கரிசலாங்கண்ணியின் மருத்துவ குணத்தால் கண் சார்ந்து வரக்கூடிய நிறைய பிரச்னைகள் தவிர்க்கப்படும். இந்த மை கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதால் கண் எரிச்சல், தலைவலி போன்றவை தவிர்க்கப்படும். பொதுவாக, தலைக்கு விளக்கெண்ணெய் தேய்ப்பதன் மூலம் மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும், கேசம் வலுப்படும். அதைக் கண் மை தயாரிக்கப் பயன்படுத்தும்போது, கண்ணின் ஆரோக்கியத்துக்குக் கவசமாக இருக்கும். வைரஸ் தொற்றினால் ஏற்படுகிற மெட்ராஸ் ஐ போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். கண்ணில் பூவிழும் பிரச்னையையும் தவிர்க்க உதவும். மஞ்சள் கரிசலாங்கண்ணி - விளக்கெண்ணெய் இவை இரண்டும் சேரும்போது சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள 96 வகையான மருத்துவப் பிரச்னைகளை குணமாக்கும் மற்றும் வராமல் தடுக்கும் ஆற்றலும் கிடைத்துவிடும்.’’ சுட்டும் விழிச் சுடருக்கு... ஆர்கானிக் மையிடுவோம்!

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments