நிதி நிறுவனமொன்றில் பணியாற்றும் அதிகாரியொருவர் போதைப்பொருள் கடத்திய போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி நிறுவனம் ஒன்றின் அதிகாரி, காரில் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற போது இலந்தடிய பிரதேசத்தில் வைத்து நுரைச்சோலை பொலிஸாரால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல நிதி நிறுவனமொன்றின் ஆனமடுவ கிளையில் கடன் வழங்கும் அதிகாரியாக கடமையாற்றிய 40 வயதான ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர் காரின் சாரதி ஆசனத்திலும் மற்றைய முன் இருக்கைகளிலும் ஏறக்குறைய 20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா ஆறு கிலோ 500 கிராம் கொண்டு சென்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Leave Comments