மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மே மாதம் முதல் இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மே மாதம் முதல் இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். குரு பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குரு பகவானின் பார்வையாலும் குரு பயணம் செய்வதை பொறுத்தும் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். குரு பெயர்ச்சி:குரு பகவான் நினைத்ததை நிறைவேற்றுவார். அவரது பயணம் யாருடைய ராசிக்கு சாதகமாக இருக்குமோ அந்த ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கும். குரு பகவான் ராசியை பார்க்கும் போதும், 2,5,7,9,11ஆம் இடங்களில் பயணம் செய்யும் போது நன்மைகளை செய்வார். மே மாதம் 1ஆம் திகதியன்று நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் அற்புதமான பலன்கள் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம். மேஷம்: குரு பகவான் உங்களுடைய ஜென்ம ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் பண வருமானம் அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்திற்கு வரும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 6,8,10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. ஏழரை சனி காலம் தொடங்கினாலும் உங்களுக்கு ஏற்றம் மிகுந்த காலமாகவே உள்ளது. பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். வாக்கு ஸ்தான குரு சொன்ன சொல்லை காப்பாற்ற வைப்பார். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும். திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. ரிஷபம்: சித்திரை மாதத்திற்குப் பிறகு ரிஷப ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். உங்கள் ராசியில் உள்ள குரு பகவான் 5,7,9ஆம் வீட்டிற்கு பார்வையிடுவதால் புதிய சொத்துக்கள் வாங்கலாம். தொட்டது துலங்கும். புதிய வேலை கிடைக்கும். லாபங்கள் அதிகரிக்கும். வேலை மாற்றம், ஊர் மாற்றம், இடமாற்றம். திருமணம் சுப காரியம் நடைபெறும். மிதுனம்: மே மாதம் முதல் உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு குரு பகவான் வரப்போகிறார். பண விசயத்தில் கவனம் தேவை. தொழில் முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனம் தேவை. மன உளைச்சல் நீங்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். வழக்கு பிரச்சினைகள் நீங்கும். நிறைய பயணங்களை மேற்கொள்வார்கள். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். காதல் திருமணம் செய்வதற்கான நேரம் கைகூடி வந்துள்ளது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். நரசிம்மர் வழிபாடு நன்மையை அதிகரிக்கும். கடகம்: தொழில் குரு வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன சிக்கல்களை இடைஞ்சல்களை ஏற்படுத்தினாலும் பணத்திற்கு பஞ்சமில்லை. சித்திரை மாதம் முதல் குரு பகவான் 11ஆம் வீட்டிற்கு மாறுகிறார். லாபங்கள் உங்களை தேடி வரப்போகிறது. இழந்த செல்வங்களை மீட்கப்போகிறீர்கள். கவலைகள். கஷ்டங்களில் இருந்து மீண்டு வரப்போகிறீர்கள். கையை விட்டு போன பணம் வீடு தேடி வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரப்போகிறது.
Leave Comments