செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

கேரள ஸ்பெஷல் மீன் ரெசிப்பி

கேரள ஸ்பெஷல் மீன் ரெசிப்பிகள் சில.

ad

news-details

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளம் அரபிக்கடலை ஒட்டியே அமைந்துள்ளது. இயற்கை வளங்களைப் பேணிக்காப்பதில் கேரள மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம். இங்கு பணப்பயிர்கள் என்றழைக்கப்படும் ஏலக்காய், மிளகு, கோப்பி, தேயிலை, ரப்பர் போன்றவை அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. காய்கறிகள், முட்டை, இறைச்சி போன்றவற்றுக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவையே நம்பியுள்ளது கேரளம். கடற்கரையை அதிகம் கொண்டுள்ளதால் மீன்தான் கேரள மக்களின் முக்கிய உணவு. மீன் உணவில் புரதம், கல்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், ஒமேகா-3 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மத்தி, அயிலா, கறி மீன், நங்கு கொளுவா, கிளி மீன், யேரி, என்சீலா, நெய், சூடா போன்ற மீன் வகைகளும், சால்மன், டூனா, மெர்லின் போன்ற பெரிய வகை மீன்களும் இங்கு தாராளமாகக் கிடைக்கின்றன. மீன் உணவு தயாரிப்பதில் இயற்கை மணம்கொண்ட தேங்காய் எண்ணெய் மற்றும் மருத்துவக் குணம் நிறைந்த குடம்புளி இரண்டும் முக்கியப் பங்காற்றுகின்றன. தலசேரி தம் மீன் பிரியாணி தேவையானவை: நெய் மீன் - அரை கிலோ சீரக சம்பா அரிசி - 3 கப் இஞ்சி - பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - ஒன்று வெங்காயம் - கால் கிலோ (நீள வாக்கில் மெலிதாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் தக்காளி - ஒன்று தயிர் - கால் கப் புதினா, கொத்தமல்லி இலைகள் - கைப்பிடி அளவு கரம் மசாலாத்தூள் - தேவையான அளவு எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன் கசகசா - அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு - சிறிதளவு நெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு அலங்கரிக்க: முந்திரிப்பருப்பு - 10 - 12 உலர் திராட்சை - 15 - 18 நறுக்கிய வெங்காயம் - 2 டீஸ்பூன் செய்முறை: மீனை சுத்தம் செய்துகொள்ளவும். அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு கலவையைத் தயார் செய்யவும். இந்தக் கலவையில் மீன் துண்டுகளை நன்கு புரட்டி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயத்தை அதே எண்ணெயில் வதக்கவும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் மல்லித்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். பிறகு கசகசா, நறுக்கிய தக்காளி மற்றும் தயிர் சேர்க்கவும். குறைந்த சூட்டில் நன்கு வதக்கவும். நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். கிரேவி கெட்டியாகும்போது மீன் சேர்த்து லேசாகப் புரட்டி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். பிரியாணி அரிசியைக் கழுவி நன்கு வடிகட்டவும். அகலமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்து வைக்கவும். பின்னர் முந்திரிப்பருப்பு, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும். பின்னர் அதே பாத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, மீதமுள்ள மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வடிகட்டிய அரிசி சேர்த்துக் கிளறி 5 நிமிடங்கள் வதக்கவும். சூடான நீர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். வாணலியை இறுக்கமாக மூடி, அரிசி மென்மையாகும் வரை சமைக்கவும். இடையிடையே கிளறி வெந்தபின் இறக்கவும். அகலமான பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் நெய் தடவி மீன் மசாலாவைப் பரப்பவும். கரம் மசாலா ஒரு சிட்டிகை தூவிவிடவும். பின்னர் வேகவைத்த அரிசி, ஒரு சிட்டிகை கரம் மசாலா, வறுத்த வெங்காயம், திராட்சை மற்றும் முந்திரி ஆகியவற்றைப் பரப்பவும்.பின்னர் மூடியால் காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி அடுப்பில் வைக்கவும். 10 - 13 நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும். தலசேரி தம் மீன் பிரியாணி தயார். தயிர்ப் பச்சடி, பப்படம் மற்றும் ஊறுகாய் ஆகியவை இந்த தலசேரி மீன் பிரியாணிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கேரளாவில் அனைத்து வகை பிரியாணிகளுக்கும் இவற்றைத் தொட்டுக்கொள்வது வழக்கம். மீன் மோலி தேவையானவை: மீன் - அரை கிலோ வெங்காயம் - ஒன்று (மெலிதாக நறுக்கவும்) இஞ்சி - (நறுக்கியது) ஒரு டீஸ்பூன் பூண்டு - (நறுக்கியது) ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 5 (நறுக்கவும்) மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன் வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 2 கப் (இரண்டாவது பால்) தேங்காய்ப்பால் - ஒரு கப் (முதல் பால்) எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - 5 டீஸ்பூன் தக்காளி - ஒன்று (சிறியது) கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: மீனை சுத்தம் செய்யவும். கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு உப்பு, கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கி மீனில் புரட்டி வைக்கவும். பின்னர் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து மீனை வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். பின்னர் மல்லித்தூள், தேவையான உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து சேர்த்து 5 நிமிடங்கள் வைத்திருந்து மீதமுள்ள எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். வறுத்த மீன் சேர்த்து மூடி ஒரு நிமிடம் வைக்கவும். முதலாம் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் நறுக்கிய தக்காளி, வெந்தயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்கவும். அடு்ப்பை அணைத்து பாத்திரத்தை இறுக்கமாக மூடிவைக்கவும். தக்காளி இந்தச் சூட்டிலேயே வெந்துவிடும். மலபார் மீன் ரோஸ்ட் தேவையானவை: மீன் - கால் கிலோ வெங்காயம் (பெரியது) - ஒன்று (நறுக்கவும்) தக்காளி - ஒன்று (நறுக்கவும்) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்) கறிவேப்பிலை - சிறிதளவு கெட்டி தேங்காய்ப்பால் - ஒரு கப் புளிச்சாறு - ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: மீனை சுத்தம் செய்துகொள்ளவும். அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மல்லித்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் மீனை மசாலாவில் புரட்டி அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி புளிச்சாறு, தக்காளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் சிறுதீயில் வதக்கவும். பின்னர் வறுத்த மீன், தேங்காய்ப்பால் சேர்த்து சிறுதீயில் வைத்திருந்து நன்கு ரோஸ்ட் ஆனதும் இறக்கவும். நாடன் கூந்தல் ரோஸ்ட் தேவையானவை: கணவாய் - கால் கிலோ வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று (சிறியது) இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் செய்முறை: மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு புரட்டி அரை மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மீன் கலவையைச் சேர்க்கவும். கூடுதலான தீயில்வைத்து வதக்கவும். ஐந்து - ஏழு நிமிடங்கள் வைத்திருந்து பின் மிதமான தீயில் வைக்கவும். தண்ணீர் வற்றியதும் வெந்தயத்தூள் சேர்த்து மீனை நன்கு சுருள வதக்கி இறக்கவும் (மீன் வதக்கும்போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. மீன் தண்ணீர்விட்டு வேகும்).

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments