சமையலறை டிப்ஸ்
சமையலறையில் வைக்கும் குப்பைக் கூடையில் பண்டிகை நாட்களில் குப்பைகள் அதிகம் சேர்ந்து விடும். அதைத் தவிர்க்க, குப்பைக் கூடையின் உட்புறம் பழைய செய்தித்தாளையோ, பழைய பிளாஸ்டிக் பையையோ வைத்து குப்பைக் கூடையின் மேற்புறம் Garbage cover-ஐப் போட்டுவிட்டால் தண்ணீர் சிந்தினாலும், கூடையின் உட்புறம் பாழாகாது. மாவு அரைத்து வழித்து எடுத்து மேல் மாவு சேர்ப்பதற்குள் கிரைண்டர் காய்ந்து விடும். இதைத் தவிர்க்க, மாவினை முழுவதுமாக எடுத்த பிறகு கிரைண்டர் குழவி மூழ்கும் வரை நீர் ஊற்றி ஒரு நிமிடம் ஓட விடவும். பிறகு உட்புறம், குழவிக்கல், மூடியைத் தனித்தனியே சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். கையைச் சுத்தம் செய்ய ஹேண்ட்வாஷை அழுத்தும்போது அதிகமாக லிக்விட் வருவதைத் தடுக்க, அழுத்தும் இடத்துக்குக் கீழே ஒரு ரப்பர் பேண்டு போட்டுவைத்தால் அளவாகவும் சீராகவும் வரும்.
Leave Comments