சமையலறை டிப்ஸ் சில
மாங்காயைத் துருவி பொரித்த குழம்பு மற்றும் கூட்டு வகைகளில் கடைசியாகப் போட்டு ஒரு கொதிவந்ததும் இறக்கினால், சுவை கூடும் (மாங்காய் சீஸனில் மாங்காய்கள் வாங்கி, துருவி, வெயிலில் காயவைத்து, பொடித்து, ஆம்சூர் பொடியாக்கி வைத்துக் கொண்டு இப்படி உபயோகித்துக் கொள்ளலாம்). சாம்பார் செய்யும்போது, புளியின் அளவைக் குறைத்தோ, முற்றிலும் தவிர்த்தோ தக்காளியைச் சேர்த்துக் கொதிக்கவிட்டால், சுவை கூடும். இது, எல்லாவித டிபன் வகைகளுக்கும் பொருத்தமான சைடிஷ். ரவை, கோதுமை மாவு, அரிசி மாவு போன்றவற்றை கலந்து கரைத்த தோசை செய்யும்போது மிளகாய், கறிவேப்பிலை (விருப்பப்பட்டால் ஒரு துண்டு வெங்காயம்) ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, அதில் கடுகு தாளித்து, மாவு வகைகளை சேர்த்துக் கரைத்து, தோசை வார்த்தால்... அருமையான சுவையுடன் இருக்கும். உப்புமா வகைகள், கலந்த சாத வகைகளைப் பரிமாறும்போது ஓமப்பொடி, காராபூந்தி, மிக்ஸர் போன்ற ஏதாவதொன்றைத் தூவிப் பரிமாறினால், கரகரப்பு கூடும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
Leave Comments