தொழிற்சங்க போராட்டத்தை நடத்தி வரும் சுகாதார தொழிற்சங்கங்களுக்கும், நிதியமைச்சருக்குமிடையில் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது.
இன்று (16) நிதி அமைச்சருக்கும் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாகவும், சுகாதார தொழிற்சங்கங்களின் முன்மொழிவுகள் தொடர்பான முடிவுகளை எடுக்க ஜனாதிபதி நாடு திரும்பும் வரை கால அவகாசம் வழங்குமாறு கோரியதாகவும் சுகாதார தொழிற்சங்கங்களின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். சுகாதார தொழிற்சங்கக் கூட்டணியின் முன்மொழிவை நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் ரவி குமுதேஷ் தெரிவித்தார். தற்போதைய வேலைநிறுத்தம் நாளை காலை 8.00 மணிக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டாலும், 14 நாட்களில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்காக நாளை மறுநாள் (18) சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் பொது மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படும் என ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.
Leave Comments