நியூசிலாந்தில் முதல் அகதிபெண் எம்.பியான கோல்ரிஸ், திருட்டு குற்றச்சாட்டில் பதவியை துறந்துள்ளார்.
வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார். நியூசிலாந்தின் மத்திய-இடது பசுமைக் கட்சியின் உறுப்பினர் கோல்ரீஸ் கஹ்ராமன், ஆடைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ராஜினாமா செய்தார். கோல்ரீஸ் ஈரானில் பிறந்தார். தத்தெடுத்த பெற்றோருடன் அகதியாக நியூசிலாந்துக்கு வந்தார். அவர் 2017 இல் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு அகதியாக வந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி., கோல்ரிஸ் ஆவார். 43 வயதான அவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடுகிறார். ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகளுக்காக வாதிட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். ஆக்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர சில்லறை விற்பனையாளரிடம் இருந்து ஆடைகள் திருடப்பட்டது தொடர்பான போலீஸ் விசாரணைக்குப் பிறகு, பதவி விலக கோல்ரிஸின் முடிவு வந்தது. குற்றம் சாட்டப்பட்டபோது ஆடைகளைத் திருடியதை கோல்ரீஸ் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தவறு என்று தெரிந்தும் அந்த மன அழுத்த சூழ்நிலையை தவிர்க்கவே அவ்வாறு செய்ததாகவும் விளக்கமளித்துள்ளார். கோல்ரீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவரது நடத்தை தனக்கு புதிராக இருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Leave Comments