செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

திறன்மேம்பாடு திட்ட நிதி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

ad

news-details

திறன்மேம்பாடு திட்ட நிதி முறைகேடு வழக்கில், ஒரு முன்னாள் முதல்வரான என்னை கைது செய்ய 17-ஏ சட்டப்பிரிவின் படி, ஆளுநருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்யாமல், திடீரென சிஐடி போலீஸார் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்தது சட்டப்படி செல்லாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்சந்திரபாபு நாயுடு தரப்பில் கடந்தஆண்டு செப்டம்பர் 23ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே சந்திரபாபு நாயுடுவுக்கு இதே வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் தற்காலிக ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன் பின்னர், தற்காலிக ஜாமீன்ரத்து செய்யப்பட்டு, நிரந்தர ஜாமீனும் வழங்கப்பட்டது. ஆனால்,திறன் மேம்பாடு நிதி வழக்கில் 17-ஏ வின் படி தன்னை கைது செய்தது செல்லாது எனும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதி அனிருத்தா போஸ், நீதிபதி பேலாஎம். திரிவேதி ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமலும், தக்க அனுமதி பெறாமலும் சந்திரபாபு நாயுடுவை கைது செய்துள்ளனர். சிஐடி தக்க அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் இது சட்ட விரோதமானது என நீதிபதி அனிருத்தா போஸ் தனது தீர்ப்பில் கூறினார். ஆனால், மற்றொரு நீதிபதியான பேலா எம். திரிவேதி தனதுதீர்ப்பில், 17-ஏ எனும் திருத்தப்பட்ட சட்டத்தின் படி, சந்திரபாபு நாயுடுவை கைது செய்தது செல்லும். அதாவது, 2018 ஆண்டில் தான் இச்சட்டம் அமலுக்கு வந்தது. அதற்கு முன்பாக இவ்வழக்கு பதிவாகி உள்ளதால், சந்திரபாபு நாயுடுவை ஆளுநரின் அனுமதி பெறாமல் கைது செய்தது செல்லுமென தீர்ப்பு வழங்கினார். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றுவதாக நீதிபதி அனிருத்தா போஸ் அறிவித்தார்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments