செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பளித்த கோட்டாவின் தீர்மானத்தை வலுவற்றதாக்கியது உயர்நீதிமன்றம்!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வாவுக்கு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

ad

news-details

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயிரிழந்த பரத பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கஸாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி, பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் முன்னாள் ஜனாதிபதி உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் 2016 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கோட்டாவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு துமிந்த சில்வாவை விடுதலை செய்ய சிபாரிசு செய்ததையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஜூன் மாதம் விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார். விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும், அவரது விடுதலைக்கு எதிரான வழக்கை தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 2022 ஆம் ஆண்டு மே மாதம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பை உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியிருந்த நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் துமிந்த சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments