செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

தோனிக்காக தன் வீட்டை மாற்றிய கடலூர் ரசிகர் தூக்குப் போட்டு தற்கொலை

தோனியின் தீவிர ரசிகரும், அவருக்காக தன்னுடைய வீட்டை மாற்றிய கடலூர் கோபி கிருஷ்ணா தான் வடிவமைத்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ad

news-details

கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரும், அவருக்காக தன்னுடைய வீட்டை மாற்றிய கடலூர் கோபி கிருஷ்ணா ஆசை ஆசையாக தான் வடிவமைத்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான இவர், துபாயில் வேலை செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பிய கோபி கிருஷ்ணா, தன்னுடைய வீட்டை மஞ்சள் நிறமாக மாற்றியதுடன், சுவர் முழுவதும் தோனியின் படங்களுடன், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியையும் வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் இவரின் வீடு வைரலானதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, `இந்த வீட்டின் தோற்றத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். இது எனக்கானது மட்டுமல்ல. சென்னை அணியின் மீதும் , என் மீதும் உள்ள அன்பை வெளிப்படுத்தும் செயல். இது சாதாரண விஷயம் இல்லை. நீங்கள் எடுக்கும் முடிவுக்கு மொத்த குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும். இது நீடித்து நிலைக்கக் கூடியது. சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுவிட்டு, உடனே மாற்றிவிடுவது போல கிடையாது. அதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றிகள்’ என்று பதிவிட்டிருந்தார். அதையடுத்து கோபி கிருஷ்ணாவின் வீட்டுக்கு நேரில் சென்ற தற்போதைய இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, அந்த வீட்டைப் பார்த்து வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு திரை பிரபலங்களும், இளைஞர்களும், பொதுமக்களும் கோபி கிருஷ்ணாவின் வீட்டை நேரில் சென்று பார்த்தார்கள். கோபி கிருஷ்ணா துபாயில் வேலை செய்து வந்தாலும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது, இந்தியாவுக்கு திரும்பி விடுவார். இந்த நிலையில்தான் ஆசை ஆசையாக தான் வடிவமைத்த வீட்டில், அதிகாலை தூக்கில் சடலமாக தொங்கியிருக்கிறார் கோபி கிருஷ்ணா. அதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அலறி துடித்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற ராமநத்தம் போலீஸார், கோபி கிருஷ்ணாவின் சடலத்தை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தற்கொலை குறித்தும் விசாரனை நடத்தி வருகின்றனர். போலீஸாரிடம் பேசிய கோபி கிருஷ்ணாவின் உறவினர்கள், “கோபி கிருஷ்ணாவுக்கும், இதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்தது. பொங்கலை முன்னிட்டு நேற்று நடந்த விளையாட்டுப் போட்டியில், அந்த கொடுக்கல் வாங்கல் பிரச்னை வந்தது. அப்போது, கோபி கிருஷ்ணாவை சிலர் தாக்கியிருக்கிறார்கள். அந்த மன உளைச்சலில்தான் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். உயிரிழந்த கோபி கிருஷ்ணாவுக்கு, அன்பரசி என்ற மனைவியும், 10 மற்றும் 8 வயதில் ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். அத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments