நாய்களின் மரபணு பதிவு செய்துள்ள நகர நிர்வாகம், தெருவில் மலம் கழிக்கும் நாய்களை அடையாளம் காண முடியுமென நம்புகிறது.
வீதிகளில் நாய்கள் மலம் கழிக்கும்போது உரிமையாளர்கள் சிலர் அதை சுத்தம் செய்வதில்லை. இத்தாலியின் போல்ஸானோ நகரில் இது பெரும் பிரச்சினையானது. விளம்பரம் வீதிகளில் கிடக்கும் மலத்தை வைத்து உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க நகர நிர்வாகம் திட்டமிட்டது. தற்போது வட்டாரத்தில் இருக்கும் சுமார் 40,000 நாய்களின் மரபணு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நாய்க்கு யார் உரிமையாளர் என்றும் பதிவு செய்யப்படுகிறது. வீதியில் கண்டெடுக்கும் மலத்தைச் சோதிக்கும்போது எந்த நாயின் மரபணு என்பது தெரியவரும். நாயின் உரிமையாளர் யார் என்பதையும் கண்டுபிடித்துவிடலாம். இதுவரை 10,000 நாய்களின் மரபணு பதிவுசெய்யப்பட்டுள்ளது. விளம்பரம் வீதியில் மலம் கிடப்பதாக அதிகாரிகள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான புகார்களைப் பெறுகின்றனர். உரிமையாளர்களை அடையாளம் காண்பதில் எப்போதும் சிரமம் இருப்பதாக அவர்கள் கூறினர். மலத்தைச் சுத்தப்படுத்தாத உரிமையாளர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும்.
Leave Comments