செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கடலூரில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

news-details

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல்...

திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் - தங்கர் பச்சான்
மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்
தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்

அன்புமணி போட்டியில்லை

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கும் அவருக்கு கடும்போட்டி நிலவிய நிலையில், 70 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் தருமபுரியில் வென்றார். 5,04,235 வாக்குகள் பெற்று அன்புமணி தோல்வியை சந்தித்தார்.

எனினும், அதிமுக உடனான கூட்டணி ஒப்பந்தத்தின்படி ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்று நாடாளுமன்றம் சென்றார். இம்முறை மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் மீண்டும் அன்புமணி களமிறங்கலாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

தற்போதைய தருமபுரி எம்பியான செந்தில்குமாருக்கும் திமுக வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான்

அழகி, பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர் தங்கர் பச்சான். இவர் பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments