இயற்கையான முறையில் பூச்சி விரட்டிகளை தயாரிக்கும் முறைகள் பற்றிய விபரம் கீழே.
இயற்கை முறையில் பூச்சிகளை விரட்ட, ஏராளமான இயற்கை நுட்பங்கள் உள்ளன. உங்களுக்குத் தேவையானதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வழக்கமாக இயற்கை பூச்சி விரட்டிகளை மாலை 4 மணிக்கு மேல் தெளித்தால், நல்ல பலன்கள் கிடைக்கும். வேப்பங்கொட்டைச் சாறு 5 கிலோ வேப்பங்கொட்டையை உரலில் இட்டு இடித்து, சல்லி சாக்கு அல்லது மெல்லிய துணியில் கட்டி, 10 லிட்டர்தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாற்றினைப் பிழிந்து எடுத்து வடிகட்டி. 190 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். இதனுடன் 100 மி.லி காதிசோப்புக் கரைசலையும் ஓட்டும் திரவமாக கலந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் வெள்ளை ஈ, காய்ப்புழுக்கள், அசுவினி, இலைச்சருட்டுபுழு, குருத்துப்புழு, கதிர்நாவாய் பூச்சி, தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். நண்டுக் கரைசல் 300 கிராம் பூண்டை உரலில் இட்டு இடித்து, 150 மி.லி மண்ணெண்ணெயை 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதை 60 லிட்டர் நீரில் சேர்த்து, ஒரு ஏக்கர் அளவுக்குத் தெளிக்கலாம். பெருங்காயம் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கிலோ பெருங்காயத்தை ஒரு சாக்குப் பையில் போட்டு நீர்ப்பாசனம் இருக்கும் கால்வாயில் போட்டு வைத்தால், நீரில் பெருங்காயம் கரைந்து, செடிகளுக்குச் செல்கிறது. இந்த முறையால் பயிர்கள் நன்றாக வளர்வது மட்டும் இல்லாமல், பூச்சிகளின் தாக்குதலும் குறைகிறது. இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசல் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றில் தலா அரைக்கிலோ அளவு எடுத்து, உரலில் இடித்துப் பசைப்போல ஆக்கி அதை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு 4 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரை ஊற்றி 3 நாள்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, ஒரு லிட்டர் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மூலிகைய் பூச்சி விரட்டி வேப்பிலை, கற்றாழை, எருக்கன் இலை, தும்பை இலை, நொச்சி இலை ஆதியவற்றில் தலா 2 கிலோ அளவு எடுத்துப் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் நறுக்கிய இலைகளைப் போட்டு அவை மூழ்கும் அளவுக்குப் பசுமாட்டுச் சிறுநீரை ஊற்றி 3 நாள்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, ஒரு லிட்டர் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
Leave Comments