அவலோகிதேஸ்வர போதிசத்வாவுக்கு உளவியல் சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்பட்டது.
அவலோகிதேஸ்வர போதிசத்வா என்ற பெயரில் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பௌத்த மதத்தை சிதைக்கும் வகையில் பல்வேறு பிரசங்கங்களை செய்த மகிந்த கொடித்துவக்குக்கு உளவியல் சிகிச்சையை பரிந்துரைத்து கோட்டை நீதவான் திலின கமகே அறிக்கை சமர்ப்பித்துள்ளார். . சந்தேகநபரின் மேலதிக சிகிச்சை தொடர்பிலான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, சிறை வைத்தியரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் மேலதிக அறிக்கையின் பிரதிகளை உடனடியாக விசேட வைத்தியர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று (24) உத்தரவிட்டார்.
Leave Comments