செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி பதவியிலிருப்பதால் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவது பற்றி தமிழ் அரசு கட்சிக்குள் கலந்துரையாடப்படவில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ad

news-details

மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி பதவியில் இருப்பதால் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது அவசியம். அத்தோடு தற்போது உள்ள மக்கள் ஆணையில்லாத நாடாளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது-

மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டியது அவசியம்.

அத்தோடு தற்போது உள்ள மக்கள் ஆணையில்லாத நாடாளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இதேவேளை ஐனாதிபதி சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக இருக்கிறது. எனவே நடாத்த வேண்டிய தேர்தல்களை கூட நடாத்தாமல் இருக்கிற இந்த ஐனாதிபதி இனியும் தாதமிக்காது ஐனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை உடனடியாக நடாத்த வேண்டுமென்றார்.

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கு பேசப்பட்டு வருவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது தமிழரசுக் கட்சி இதைப்பற்றி இன்னமும் கலந்துரையாடவில்லை எனவும் தேர்தல் அறிவிக்கப்படுகிற போது இது சம்மந்தமாக கலந்துரையாடி முடிவெடுப்போம் என பதிலளித்துள்ளார்.

மேலும் பொது வேட்பாளரோ தனி வேட்பாளரோ அது எவருக்கும் இருக்கிற உரிமை. யாரும் தேர்தலில் போட்டியிடலாம். எவரையும் போட்டியிடக் கூடாது என்று சொல்லுகிற உரிமை எவருக்கும் கிடையாது.

இந்த பொது வேட்பாளர் தொடர்பில் எமது தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார் யார் வேட்பாளர்கள் என தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.

இதேவேளை ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ள விடயம் குறித்து கேட்ட போது அவர் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியினரும் எல்லா மக்களின் வாக்கும் தங்களுக்கு தான் என்று சொல்லுவார்கள். ஆகையினால் அதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. யாருக்கு வாக்களிப்பது என மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் இங்குள்ள தமிழ்க் கட்சிகளை சந்தித்து ஆதரவை கோர உள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்ட போது அடுத்தவாரம் அவர்கள் சந்திக்க உள்ளதாக கூறினார்.

மேலும் அவர்களோடு மட்டுமல்ல ஏனைய பல கட்சிகளுடனும் நிறைய சந்திப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் தேர்தல் என்று வருகிற பொழுது அதில் யார் யார் வேட்பாளர்கள் என அறிவிக்கப்படுகிற பொழுது நாங்கள் உறுதியான சந்திப்புக்களை நாங்கள் மேற்கொண்டு முடிவை தீர்மானிப்போம். இவ்வாறான நிலைமையில் தான் தேசிய மக்கள் சக்தியினர் எம்மை சந்திக்க போவதாக சொல்லியுள்ளனர். எனவே எம்மை சந்திக்க வருகிற எல்லோரையும் நாங்கள் சந்திப்போம் என்றார்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments