பிறப்பெடுக்கும் எவரும் முடிவில் பிடி சாம்பலாகத்தான் வேண்டும் என்பதால், எதிலும் அளவுக்கு அதிகமான ஆசை வைக்காமல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதுதான் திருநீறு.
திருநீற்றின் பெருமை சொல்லவே உருவானது திருஞானசம்பந்தரின் `திருநீற்றுப் பதிகம்’. `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு’ என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம். நீராடல் இயற்கைத் தூய்மையை உறுதிப் படுத்தும். உடல் நலம் குன்றியவர்களுக்கு தண்ணீரில் மூழ்குவது ஆபத்து எனில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக விபூதியை உடலில் பூசிக் கொள்ளலாம். இதுவும் நீராடலுக்குச் சமம் என்கிறது தர்ம சாஸ்திரம். தண்ணீரால் நீராடுவதை ‘வாருண ஸ்நானம்’ என்றும் விபூதியைப் பூசிக் கொள்வதை ‘ஆக்னேய ஸ்நானம்’ என்றும் சொல்வார்கள். சுத்தம் செய்யத் தண்ணீர் பயன்படுவது போல், நெருப்பும் பயன்படும். தங்கத்தில் இருக்கும் அழுக்கை அகற்ற நெருப்பைப் பயன்படுத்து வார்கள். பசுவின் சாணம் அக்னியில் பஸ்பமாகி உருவாவதுதான் விபூதி. ஆகவே, விபூதியை அணி யும்போது உடலும், உள்ளமும் தூய்மை பெறும். திருநீறு நான்கு வகைப்படும். அவை கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பன. `சாம்பலாகிவரும் திருநீறு மும்மலங்களையும் சாம்பலாக்கும்’ என்கிறது தேவாரம். `நீறில்லா நெற்றி பாழ்’ என்பது ஓளவை வாக்கு. `நீறு’ என்றால் சாம்பல்; `திருநீறு’ என்றால் மகிமை பொருந்திய நீறு என்று பொருள். பிறப்பெடுக்கும் எவரும் முடிவில் பிடி சாம்பலாகத்தான் வேண்டும் என்பதால், எதிலும் அளவுக்கு அதிகமான ஆசை வைக்காமல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதுதான் திருநீறு. திருநீறு `விபூதி’ என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் வழங்கப் படும் இலை விபூதிப் பிரசாதம் மகத்துவ சக்தி வாய்ந்தது. முருகனருளால் இந்தப் பன்னீர் இலை விபூதிப் பிரசாதத்தைப் பெற்று, அதை உட்கொண்டதன் மூலம் மாமுனிவர் விஸ்வா மித்திரர், தன்னை வருத்திய பிணிப் பாதிப்பில் இருந்து விடுபட்டார் என்கிறது புராணம். வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று, விபூதியை எடுத்து கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகியவற்றால் எடுத்து அண்ணாந்து, நெற்றியில் பூச வேண்டும். `திருச்சிற்றம்பலம்', `சிவாயநம:' அல்லது 'சிவ சிவ' என்று சொல்லி அணிந்துகொள்ள வேண்டும். நடந்துகொண்டும், படுத்துக்கொண்டும் விபூதி தரிக்கவே கூடாது. ஸ்வாமி முன்பும், குரு முன்பும், சிவனடியார் முன்பும் முகத்தைத் திருப்பி நின்று விபூதி அணிய வேண்டும்.
Leave Comments