செம்பருத்தி தொடரில் கார்த்திக்குக்குப் பதிலாக முதன்முதலாக தொகுப்பாளராக இருந்த அக்னி சின்னத்திரை நடிகராக என்ட்ரியானார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `மலர்'. செம்பருத்தி தொடரின் வெற்றிக்குப் பிறகு அக்னிக்குக் கிடைத்த வாய்ப்புதான் `மலர்' தொடர். கார்த்திக் - ஷபானா ஜோடியாக நடித்திருந்த `செம்பருத்தி' தொடரின் இடையே கார்த்திக் அந்தத் தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக முதன்முதலாக தொகுப்பாளராக இருந்த அக்னி சின்னத்திரை நடிகராக என்ட்ரியானார். அந்தத் தொடரில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து அந்தத் தொடருக்குப் பிறகு `மலர்' தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் அந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதில், "துரதிஷ்டவசமாக எனக்குக் காயம் ஏற்பட்டு விட்டது. நான் மீண்டு வருவதையும், இந்தப் புராஜெக்ட்டை கருத்தில் கொண்டும் 'மலர்' தொடரில் இருந்து நான் விலக இருக்கிறேன். இது ஒரு கூட்டு முடிவு. சன் டிவிக்கும், விஷன் டைம் மற்றும் பார்வையாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். `அர்ஜூன்' கதாபாத்திரத்தில் எனக்கு பதிலாக நடிக்கும் நடிகருக்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவைக் கொடுங்கள்! நன்றி! நல்லதே நடக்கும்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.
Leave Comments