செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

மாம்பழ மஜிக்!

மாம்பழத்தில் இத்தனை வெரைட்டி உணவுகள், பானங்கள் செய்யலாமா?

ad

news-details

மாம்பழத்தின் அதீத சுவைக்கு மயங்காதவர்கள் நம்மில் யாருமில்லை. மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவது ஒருவிதம் என்றால், இங்கு அளித்துள்ள சூப்பர் ரெசிப்பிகளைச் செய்து சுவைப்பது புது விதம். மாம்பழ கீர் தேவையானவை: * இனிப்பான பெரிய மாம்பழம் – இரண்டு (தோல், கொட்டை நீக்கி துண்டுகளாக நறுக்கவும்) * பால் – ஒரு லிட்டர் * சர்க்கரை – அரை கப் * கண்டன்ஸ்டு மில்க் – 2 டேபிள்ஸ்பூன் * பாதாம் துருவல், பிஸ்தா துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: பாதியளவு மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதி அளவாக குறையும் வரை சுண்டக் காய்ச்சவும். இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும். நன்கு ஆறியவுடன் அரைத்த மாம்பழ விழுது, மாம்பழத் துண்டுகள், பாதாம், பிஸ்தா துருவல் சேர்த்துக் கலக்கவும். இதை இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும். மாம்பழ ஸ்குவாஷ் தேவையானவை: * மாம்பழக்கூழ் - 2 கப் * சர்க்கரை - 4 கப் * சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன் * கேசரி ஃபுட் கலர் - 2 சிட்டிகை * மேங்கோ எசென்ஸ் - சில துளிகள் * தண்ணீர் - 2 கப் செய்முறை: சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டி, சிட்ரிக் ஆசிட் சேர்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். இத்துடன் மாம்பழக்கூழைச் சேர்த்துக் கலக்கி, எசென்ஸ் மற்றும் கேசரி கலர் சேர்த்துக் கலக்கவும். இதை பாட்டில்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில்வைத்து பிறகு, ஐஸ் கட்டி, தண்ணீருடன் கலந்து பருக கொடுக்கலாம். மாம்பழ-இளநீர்-நுங்கு புட்டிங் தேவையானவை: * கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப் * இளநீர் - ஒரு கப் + கால் கப் * பால் - ஒரு கப் * ஃபுட் ஜெலட்டின் - மூன்றரை டீஸ்பூன் * இளநீர் வழுக்கை - ஓர் இளநீருக்குரியது * மாம்பழம் - ஒன்று (தோல் நீக்கி நறுக்கியது) * நுங்கு - 8 (தோல் நீக்கி நறுக்கியது) செய்முறை: மைக்ரோவேவ் அவன் பாத்திரத்தில் கால் கப் இளநீரில், ஃபுட் ஜெலட்டினை 5 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு மீதம் இருக்கும் இளநீர், பால், கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒரு பவுலில் ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் இளநீர் வழுக்கை, மாம்பழத் துண்டுகள் மற்றும் நுங்கு சேர்த்து கலக்கவும். ஊறிய ஜெலட்டின் பாத்திரத்தை மைக்ரோவேவ் அவனில் 30 விநாடிகள்வைத்து சூடாக்கவும். பிறகு வெளியே எடுத்து ரூம் டெம்பரேச்சருக்கு வந்ததும் நுங்கு இளநீர் கலவையோடு சேர்த்து நன்கு கலக்கவும். விரும்பிய அலங்கார பாத்திரத்தில் புட்டிங்கை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் 6 மணி நேரம் வைக்கவும். புட்டிங் கெட்டியானதும் எடுத்து ஜில்லென்று பரிமாறவும். மாம்பழ மில்க் ஷேக் தேவையானவை: * குளிரவைத்த பால் - 4 கப் * மாம்பழக்கூழ் - ஒரு கப் * சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன் * ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் * மாம்பழ எசென்ஸ் - சில துளிகள் * கேசரி ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை * ஐஸ் துண்டுகள் - தேவையான அளவு செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் போட்டு நுரை வரும் வரை அடித்து, கிளாஸில் ஊற்றி பரிமாறவும். தேவையானால், சில மாம்பழத்துண்டுகளை மேலே போட்டுக் கொடுக்கலாம். மாம்பழ குல்ஃபி தேவையானவை: * பால் – மூன்று கப் (காய்ச்சாதது) * பால் பவுடர் – அரை கப் * சர்க்கரை – அரை கப் * மாம்பழக்கூழ் – ஒன்றேகால் கப் * கண்டன்ஸ்டு மில்க் – கால் கப் * பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகள் – முக்கால் கப் செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பாதியாகச் சுண்டும் வரை காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கரையவிடவும். பிறகு, பால் பவுடர், கண்டன்ஸ்டு மில்க், நட்ஸ் வகைகள் சேர்த்துக் கலந்து இறக்கவும். பால் நன்கு ஆறிய பிறகு மாம்பழக்கூழ் சேர்த்துக் கலக்கவும். இதை குல்ஃபி மோல்டுகள் அல்லது சிறிய குல்ஃபி பானைகளில் நிரப்பி ஃப்ரீசரில் வைத்து, செட் ஆன பிறகு எடுத்துப் பரிமாறவும். மாம்பழ மோர்க்குழம்பு தேவையானவை: * நறுக்கிய மாம்பழம் - ஒரு கப் * தயிர் - ஒரு கப் * உப்பு - தேவையான அளவு * மஞ்சள்தூள் - சிறிது அரைக்க: * தேங்காய் - அரை கப் * காய்ந்த மிளகாய் - 4 * சீரகம் - கால் டீஸ்பூன் * பச்சரிசி - 2 டீஸ்பூன் தாளிக்க: * எண்ணெய் - ஒரு டீஸ்பூன் * கடுகு - ஒரு டீஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிது * காய்ந்த மிளகாய் - 2 செய்முறை: மாம்பழத்தைத் தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும். தயிருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்து கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம், பச்சரிசி முதலியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காய் விழுது, கடைந்த தயிர் முதலியவற்றை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் மாம்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து மோர்க்குழம்பில் ஊற்றி இறக்கவும். குறிப்பு: தயிர் சேர்த்தவுடன் அதிகம் கொதிக்க விடக் கூடாது. தயிர் திரிந்துவிடும். மாம்பழ ஜாம் தேவையானவை: * தித்திப்பான பழுத்த மாம்பழங்கள் - 6 * சர்க்கரை - 250 கிராம் * மாம்பழ எசென்ஸ் - சில துளிகள் * கேசரி ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை * சோள மாவு - அரை டீஸ்பூன் * சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன் செய்முறை: மாம்பழங்களைச் சுத்தப்படுத்தி பிழிந்து கொள்ளவும். அடிகனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயில் மாம்பழக்கூழ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், ஃபுட் கலர் சேர்த்து இளம் தீயில் கொதிக்கவிடவும். சோள மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்க்கவும். சிறிது கெட்டியானதும் எசென்ஸைச் சேர்க்கவும். சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை ‘சிம்’மில் வைத்தால் அடிபிடிக்காது). மாம்பழப் பச்சடி தேவையானவை: * பழுத்த மாம்பழம் - 2 * பொடித்த வெல்லம் - அரை கப் * மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் * சிறிய பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் - தலா ஒன்று * கடுகு - கால் டீஸ்பூன் * அரிசி மாவு - ஒரு டீஸ்பூன் * அரைத்த தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன் * எண்ணெய் - ஒரு டீஸ்பூன் * உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை: மாம்பழத்தைக் கொட்டை நீக்கி துண்டுகளாக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் நீர்விட்டு, மாம்பழத்துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேகவிடவும். இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அடுப்பை ‘சிம்’மில் வைத்து, அரிசி மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். அரைத்த தேங்காயையும் சேர்த்துக் கிளறி கீழே இறக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு கடுகு போட்டு வெடித்ததும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, பச்சடியுடன் சேர்த்துக் கலக்கவும். மங்கோ கூல் டிலைட் தேவையானவை: * மாம்பழம் - 4 * சர்க்கரை - 300 கிராம் * பால் - ஒரு லிட்டர் * ஜெலட்டின் பவுடர் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன் * குங்குமப்பூ - ஒரு சிட்டிகை * ரோஸ் எசென்ஸ் - 3 துளி செய்முறை: மாம்பழத்தைத் தோல் சீவி, சதை பாகத்தைப் பொடியாக நறுக்கி, இரண்டு கப் அளவு வரும்படி எடுத்துவைக்கவும். ஜெலட்டின் பவுடருடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் கொதித்ததும் ஊறிய ஜெலட்டினை ஊற்றி கொதிக்கவைத்து, சர்க்கரையைச் சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு, மாம்பழத்துண்டுகள், குங்குமப்பூ, ரோஸ் எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சிறிய கப்களில் ஊற்றி, ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரத்தில் கெட்டியாகிவிடும். பிறகு, அதை எடுத்து `ஜில்’லென்று சாப்பிடலாம்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments