இப்படியான பலவீனமான பாஸ்வேர்ட்களை வைத்திருந்தால் உடனடியாக மாற்றுங்கள்.
வளர்ந்து வரும் இன்றைய டிஜிட்டல் உலகில், நம் இணைய அடையாளங்கள், நிதிக் கணக்குகள், சமூக ஊடகங்கள் மற்றும் பிற முக்கியமான தரவுகளைப் பாதுகாக்க பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தி வருகிறோம். அங்கீகரிக்கப்படாத தளங்களில் இருந்து நம் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க வலுவான பாஸ்வேர்டு வைப்பது மிக முக்கியம். பலவீனமான பாஸ்வேர்டைப் பயன்படுத்துவது மூலமாக ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றைக் கண்டு பிடித்து விடமுடியும். உலக மக்களால் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு பட்டியல் மற்றும் ஹேக்கர்கள் அவற்றைக் கண்டுபிடிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் பற்றிய அறிக்கையை நார்டுபாஸ் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. அவை 2023-ம் ஆண்டின் மிக ஆபத்தான பாஸ்வேர்டுகள். எனவே, அந்தப் பட்டியலில் உள்ள கடவுச் சொற்களை நீங்கள் பயன்படுத்தி வந்தால் அதை உடனடியாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ``123456, admin, 12345678, 123456789, 1234, 12345, password, 123, Aa123456, 1234567890, 1234567, 123123, 111111, Password, 12345678910, 000000, ********, user, 1111, P@ssw0rd, root, 654321, qwerty, ******, 112233, 102030, ubnt" ஆகியவைதான் நார்டுபாஸ் அமைப்பு வெளியிட்ட பாஸ்வேர்டுகள். இந்த பாஸ்வேர்டுகளை நீங்கள் பயன்படுத்திவந்தால் அதை உடனே மாற்றுங்கள். மேலே குறிப்பிட்டுள்ள பாஸ்வேர்டுகளைக் கண்டுபிடிக்க ஹேக்கர்களால் ஒரு நொடிக்கும் குறைவாக நேரங்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது தவிர admin123 என்ற கடவுச்சொல்லை கண்டுபிடிக்க 17 நொடிகளும் Pass@123 என்ற கடவுச்சொல்லை கண்டுபிடிக்க 5 நிமிடங்களும் UNKNOWN என்ற கடவுச்சொல்லை கண்டுபிடிக்க 17 நிமிடங்களும் தேவைப்படுகின்றன என நார்டுபாஸ் தெரிவித்துள்ளது. அதனால மக்களே பாஸ்வேர்டுகளை பலமானதாக வையுங்க!
Leave Comments