தலவாக்கலை பொலிஸ் பிரிவில் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை, பாம்ஸ்டன் பிரதேசத்தில் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (16) சட,ந்த சம்பவம் நடந்தது. தலவாக்கலை பாம்ஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய கே. விஸ்வநாதன் (58) என்பவரே உயிரிழந்தார். அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த ஆசிரியரின் வீட்டுக்கு அருகில் உள்ள மரக்கறி தோட்டத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். ஆசிரியரின் சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
Leave Comments