நடிகை மிர்ணா. இவர் அடுத்து, ‘பெர்த் மார்க்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஏழு மாத கர்ப்பிணியாக நடிக்கிறார்.
தமிழில், பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை, ரஜினியின் ஜெயிலர் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை மிர்ணா. இவர் அடுத்து, ‘பெர்த் மார்க்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஏழு மாத கர்ப்பிணியாக நடிக்கிறார். விக்ரம் ஸ்ரீதரன் இயக்கும் இந்தப் படத்தில் ஷபீர் கல்லாரக்கல் நாயகனாக நடிக்கிறார். ஜெனி என்ற கதாபாத்திரத்தில் மிர்ணா நடிக்கிறார். தீப்தி, இந்திரஜித், பொற்கொடி உட்பட பலர் நடிக்கும் இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி விக்ரம் ஸ்ரீதரன் கூறும்போது, “இந்தப் படத்தின் கதை ஜெனி என்ற கேரக்டரை சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. அதனால் அந்த கதாபாத்திரத்துக்கு திறமையாக நடிக்கக் கூடியவரைத் தேடிக் கொண்டிருந்தோம். அதில் சரியாக மிர்ணா பொருந்தினார். இயக்குநர், ஹீரோ என நாங்கள் எந்த அளவுக்கு உழைப்பைக் கொடுத்துள்ளோமோ அந்த அளவுக்கு மிர்ணாவும் கொடுத்துள்ளார். இந்தப் படம் அவரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதாக இருக்கும்” என்றார்.
Leave Comments