வட்ஸ்அப்பில் ப்ளூடூத் வழியாக அருகாமையில் இருக்கும் பயனர்களுக்கு 2ஜிபி வரையிலான ஃபைல்களை அம்சம் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இது சார்ந்த சோதனை பீட்டா வெர்ஷனில் இருப்பதாக தெரிகிறது.
வட்ஸ்அப்பில் ப்ளூடூத் வழியாக அருகாமையில் இருக்கும் பயனர்களுக்கு 2ஜிபி வரையிலான ஃபைல்களை அம்சம் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இது சார்ந்த சோதனை பீட்டா வெர்ஷனில் இருப்பதாக தெரிகிறது. வட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது ப்ளூடூத் வழியாக பல்வேறு மல்டிமீடியா ஃபைல்களை ஷேர் செய்யும் அம்சம் விரைவில் வாட்ஸ்அப்பில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அருகில் உள்ள பயனர்களுக்கு 2ஜிபி வரையிலான ஃபைல்களை ஷேர் செய்ய முடியும். இதற்கென ‘Share Files’ என இருக்கும் பிரத்யேக பிரிவை பயனர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஃபைல்கள் பகிர்ந்து முடிக்கும் வரையில் பயனர்கள் அதில் இருக்க வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ‘ஷேர் இட்’ செயலி போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் அறிமுகமான பிறகே ஃபைல்களை ஷேர் செய்யும் வேகம் மற்றும் எடுக்கும் நேரம் போன்ற விவரங்கள் பயனர்களுக்கு அனுபவ ரீதியாக தெரிய வரும். வட்ஸ்அப்பில் இணையத்தை பயன்படுத்தி பயனர்களுக்கு இடையே 2ஜிபி வரையிலான ஃபைல்களை ஷேர் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave Comments