வெள்ளவத்தை, புகையிரத நிலைய வீதி பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் போகடகுவரத்து ஒழுங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காலி வீதி, வெள்ளவத்தை, புகையிரத நிலைய வீதி பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெள்ளவத்தை பகுதியிலிருந்து செல்லும் வீதி ஒரு பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகள் லிலீ அவென்யூ கிளை வீதியூடாக கரையோர வீதியில் பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிக்கும் சாரதிகள் வழமை போன்று வெள்ளவத்தை ஊடாக பயணிக்க முடியும்.
Leave Comments