கனத்த இதயத்துடன் இலக்கியா செட்டிலிருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறேன். உங்களை இந்த முடிவு பாதித்திருப்பதற்கு என் மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். இதற்காக நீங்கள் வருந்தாதீர்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'இலக்கியா'. 'இதயத்தைத் திருடாதே' தொடருக்குப் பிறகு ஹீமா பிந்து இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது அந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், 'கனத்த இதயத்துடன் இலக்கியா செட்டிலிருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறேன். உங்களை இந்த முடிவு பாதித்திருப்பதற்கு என் மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். இதற்காக நீங்கள் வருந்தாதீர்கள். சீரியலையும், படத்தையும் பேலன்ஸ் செய்வது மிகப்பெரிய விஷயம். இது எனக்கு மட்டுமல்லாது 'இலக்கியா'வில் என்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும், திறமை வாய்ந்த டெக்னீஷியன்களுக்கும் பொருந்தும். இது ஒருவித பிரஷரையும், மன அழுத்தத்தையும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஏற்படுத்துவதை நான் உணர்ந்தேன். இந்த புராஜெக்ட்டை இது சீர்குலைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிமிடம் வரை இலக்கியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய தொடர் அன்பையும், ஆதரவையும் இந்தத் தொடரில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தொடர்ந்து கொடுங்கள். என்னைப் புரிந்து கொண்டமைக்கும் என்னுடைய முடிவுக்குப் பக்கபலமாக என்னுடன் இருப்பதற்கும் நன்றி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக சன் டிவியில் 'கண்மணி' தொடரில் நடித்தவரும், தொகுப்பாளினியுமான ஷாம்பவி நடிக்கிறார்.
Leave Comments