செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

'உங்களுடன் சரிசமமாக நடிக்க ஆசை': சத்யராஜை நெகிழவைத்த விஜய் சேதுபதி

டபுள் ஹீரோ சப்ஜெக்டில் உங்களுடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்று சத்யராஜிடம் தனது விருப்பத்தை விஜய் சேதுபதி வெளிப்படுத்தியுள்ளார்.

ad

news-details

“உறுதுணைக் கதாபாத்திரமாக இல்லாமல் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் உங்களுடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும்” என்று சத்யராஜிடம் தனது விருப்பத்தை விஜய் சேதுபதி வெளிப்படுத்தியுள்ளார். கோகுல் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேசிய நடிகர் விஜய் சேதுபதி மேடையில் அமர்ந்திருந்த சத்யராஜை நோக்கி, “உங்களுடன் இணைந்து பணியபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்னை இன்ஸ்பிரேஷன் என நீங்கள் சொல்வது அநியாயம். அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் மிகச் சிறந்த நடிகர். நான் உங்களை அதிகமாக ரசித்திருக்கிறேன். சமீப காலமாகவே தொடர்ந்து உங்களது பழைய படங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் நடித்த ‘தெற்கு தெரு மச்சான்’,’ அமைதிப்படை’ உள்ளிட்ட சில படங்களை இப்போது வரைக்கும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். உங்களுடைய காமெடி சென்ஸ், ரொமான்டிக் காட்சிகள், சண்டைக்காட்சிகள் அனைத்தையும் நான் மிகவும் ரசிப்பேன். டப்பிங் ஸ்டூடியோக்களுக்குச் செல்லும்போது சவுண்ட் இன்ஜினியர்களிடம் சிறந்த நடிகர் குறித்து கேட்பேன். எல்லோரும் உங்கள் பெயரைத்தான் சொல்வார்கள். கச்சிதமாக டப்பிங் பேசுவார் என பாராட்டுவார்கள். மேடைக்காக சொல்லவில்லை. உங்களுடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என ஆசை. சப்போர்ட்டிங் ரோல் இல்லாமல் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி” என்றார் விஜய் சேதுபதி.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments