புத்த பெருமானின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் வாயில்லா பிராணிகளின் வாயில் வெங்காய வெடி வைத்து கொல்லுகின்ற கொடூரமான செயலை நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், பௌத்த பிக்குகளிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்பையும் கருணையையும் போதித்த புத்த பெருமானின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் வாயில்லா பிராணிகளின் வாயில் வெங்காய வெடி வைத்து கொல்லுகின்ற கொடூரமான செயலை நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (16) இடம்பெற்ற கோபவனியை தொடர்ந்து இடம்பெற்ற பட்டிப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாண நாக விகாராதிபதி, கல்வியமைச்சின் மத பாடப்புத்தகங்கள் தொடர்பான ஆலோசகர் ரதல்ஹடியே சிறி தம்ம தேரர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு உரையாற்றிய கஜதீபன், பௌத்த பிக்குகளை விளித்து, இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைக்கு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைகளிலே மேய்கின்ற வாயில்லா பிராணிகளான கால்நடைகளை புத்த பெருமானின் வழியில் வந்தவர்கள் என தம்மை கூறிக் கொள்வோர் வெங்காய வெடி வைத்து கொல்லுகின்ற மிகவும் கொடூரமான செயல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த கொடூர செயலை செய்பவர்கள் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏன் நான் இதனை இங்கே தெரிவிக்கின்றேன் என்றால் புத்த பகவானின் வழியில் வந்த பௌத்த தர்மத்தை போதிக்கின்ற பௌத்த துறவிகள் இந்த பட்டிப்பொங்கல் விழாவிலே கலந்து கொண்டிருப்பதால் அவர்கள் மூலம் அவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே ஆகும். உயிர்களிடத்தில் அன்பையும் கருணையையும் போதித்த ஒரு பெருமகான் தான் புத்த பெருமான். ஆனால் அந்த பௌத்த சித்தாத்தங்களை எள்ளளவும் கூட கரிசனை கொள்ளாது ஒரு பௌத்த துறவியே முன்னின்று இவ்வாறான செயல்களை செய்பவர்களை வழிப்படுத்துவதையும் தலைமை தாங்குவதையும் நாங்கள் ஊடகங்கள் வாயிலாக தினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அப்படியான துறவிகளால் ஒட்டுமொத்த பௌத்த மதத்துக்கும், புத்த பெருமானுக்கும், பௌத்தத்தை பின்பற்றுகின்ற மக்களுக்கும் வெட்கக்கேடான விடயமாக அமைந்துள்ளது. எனவே இங்கே வருகை தந்துள்ள பௌத்த துறவிகள் அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புத்த பெருமானின் சித்தாந்தங்களை தெளிவாக கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதையுமே இந்த சபையிலே கேட்டுக் கொள்கின்றேன். தமிழர்கள் மீது காட்டப்பட்ட இனவாத அடக்குமுறை இன்றைக்கு தமிழர்கள் வளர்க்கின்ற கால்நடைகள் மீதும் காட்டப்படுகின்ற ஒரு கொடூரமான ஈவிரக்கம் அற்ற செயலை தமிழர்களாகிய நாம் எதிர்கொண்டிருக்கின்றோம். இது தொடருமானால் இந்த நாட்டிலே தமிழர்கள் மட்டும் அல்லாமல் தமிழர்கள் வளர்கின்ற கால்நடைகளையும் அழிக்கின்ற செயல் பரவக்கூடும் எனவே இந்த பௌத்த துறவிகள் பௌத்த மதத்தின் பெயரால் துறவறத்தை பயன்படுத்தி இவ்வாறான கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்ற காட்டுமிராண்டிகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன். வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (16) இடம்பெற்ற கோபவனியை தொடர்ந்து இடம்பெற்ற பட்டிப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாண நாக விகாராதிபதி, கல்வியமைச்சின் மத பாடப்புத்தகங்கள் தொடர்பான ஆலோசகர் ரதல்ஹடியே சிறி தம்ம தேரர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு உரையாற்றிய கஜதீபன், பௌத்த பிக்குகளை விளித்து, இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைக்கு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைகளிலே மேய்கின்ற வாயில்லா பிராணிகளான கால்நடைகளை புத்த பெருமானின் வழியில் வந்தவர்கள் என தம்மை கூறிக் கொள்வோர் வெங்காய வெடி வைத்து கொல்லுகின்ற மிகவும் கொடூரமான செயல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த கொடூர செயலை செய்பவர்கள் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏன் நான் இதனை இங்கே தெரிவிக்கின்றேன் என்றால் புத்த பகவானின் வழியில் வந்த பௌத்த தர்மத்தை போதிக்கின்ற பௌத்த துறவிகள் இந்த பட்டிப்பொங்கல் விழாவிலே கலந்து கொண்டிருப்பதால் அவர்கள் மூலம் அவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே ஆகும். உயிர்களிடத்தில் அன்பையும் கருணையையும் போதித்த ஒரு பெருமகான் தான் புத்த பெருமான். ஆனால் அந்த பௌத்த சித்தாத்தங்களை எள்ளளவும் கூட கரிசனை கொள்ளாது ஒரு பௌத்த துறவியே முன்னின்று இவ்வாறான செயல்களை செய்பவர்களை வழிப்படுத்துவதையும் தலைமை தாங்குவதையும் நாங்கள் ஊடகங்கள் வாயிலாக தினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அப்படியான துறவிகளால் ஒட்டுமொத்த பௌத்த மதத்துக்கும், புத்த பெருமானுக்கும், பௌத்தத்தை பின்பற்றுகின்ற மக்களுக்கும் வெட்கக்கேடான விடயமாக அமைந்துள்ளது. எனவே இங்கே வருகை தந்துள்ள பௌத்த துறவிகள் அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புத்த பெருமானின் சித்தாந்தங்களை தெளிவாக கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதையுமே இந்த சபையிலே கேட்டுக் கொள்கின்றேன். தமிழர்கள் மீது காட்டப்பட்ட இனவாத அடக்குமுறை இன்றைக்கு தமிழர்கள் வளர்க்கின்ற கால்நடைகள் மீதும் காட்டப்படுகின்ற ஒரு கொடூரமான ஈவிரக்கம் அற்ற செயலை தமிழர்களாகிய நாம் எதிர்கொண்டிருக்கின்றோம். இது தொடருமானால் இந்த நாட்டிலே தமிழர்கள் மட்டும் அல்லாமல் தமிழர்கள் வளர்கின்ற கால்நடைகளையும் அழிக்கின்ற செயல் பரவக்கூடும் எனவே இந்த பௌத்த துறவிகள் பௌத்த மதத்தின் பெயரால் துறவறத்தை பயன்படுத்தி இவ்வாறான கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்ற காட்டுமிராண்டிகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
Leave Comments