பாடசாலை கழிவறை பகுதியில் வெட்டப்பட்டு முறையாக மூடப்படாத குழியில் விழுந்த 10 வயது மாணவன் பலியாகியுள்ளார்.
மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள காட்மோர் தம்த்தனை தோட்டத்தை சேர்ந்த பத்து வயது சிறுவன் ஒருவன் இன்று (4) மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6 ல் கல்வி பயின்று வரும் அனுஷன் என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலை கழிவறை பகுதியில் வெட்டப்பட்டு முறையாக மூடப்படாத குழியில் விழுந்த நிலையில் 1990 அம்பியூலன்ஸ் மூலம் மஸ்கெலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
குறித்த மாணவனின் சடலம் மஸ்கெலிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
-செல்லையா ஞானராஜ்-
Leave Comments