செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

143 கிராம் ஹெரோயினுடன் கைதானவருக்கு ஆயுள்தண்டனை!

143 கிராம் ஹெரோயினுடன் கைதானவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது.

ad

news-details

143 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி பேராலை என்ற இடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 143 கிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இன்று (18) இந்த வழக்கு  கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ.சகாப்தீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இரண்டாது நபர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டார். முதலாவது எதிரி சார்பாக சட்டத்தரணி சிறிகாந்தாவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில்  அரச சட்டவாதி என்.என்.அர்ஜுனகுமாரும் முன்னிலையாகியிருந்தனர். எதிரி சார்பாக ஆஜரான சட்டத்தரணி, எதிரியானவர் இதற்கு முன்னர் குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றுள்ளவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையாகவும் காணப்படுகின்றார் எனவும், தண்டனை குறைப்பு விண்ணப்பத்தை செய்தார். இதே நேரம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக ஆஜரான சட்டவாதி தண்டனையானது ஒரு முன்னோடியான தண்டனையாக இருக்க வேண்டும், குற்றவாளிக்கான தண்டனையானது ஒரு தனிநபருக்கான தண்டனையாக கருதாது எதிர்கால இளம் சமூகத்தை பாதுகாக்கின்ற விடயமாக கருதி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து, மன்று குற்றவாளிக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments