அமெரிக்காவில் 22 வயது இசைக்கலைஞர் ஒருவர், தனது 5 காதலிகளையும் ஒரே சமயத்தில் கர்ப்பவதியாக்கி, ஒன்றாக வளைகாப்பு நடத்தியுள்ளார்.
ஒரே நேரத்தில் ஐந்து பெண்களை கர்ப்பமாக்கிய அமெரிக்கர் ஒருவர் இணையத்தில் வைரலாகி உள்ளார். நியூயோர்க்க நகரில் வாழும் இசைக்கலைஞரான 22 வயதான Zeddy Will என்பவரே, தனது 5 காதலிகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பவதியாக்கியுள்ளார். 5 கர்ப்பிணி காதலிகளுக்கும் ஒரே சமயத்தில் வளைகாப்பு (குழந்தையை வரவேற்கும் அமெரிக்க கலாச்சார நிகழ்வு) நடத்தினார். அவரது கர்ப்பவதி காதலிகளில் ஒருவரன 29 வயதான ஆஷ்லே, குழந்தைகளை வரவேற்கும் நிகழ்ச்சி அழைப்பிதழ்களை தனது ரிக்ரொக் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து, இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜனவரி 14ஆம் திகதி குயின்ஸ் நகரில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. ஐந்து பெண்களும் ஒருவரையொருவர் சகோதரிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இந்த பெரிய குடும்பத்தை யாரும் குலைப்பதில்லையென முடிவெடுத்துள்ளதாகவும் ஆஷ்லே கூறினார். அத்துடன், காதலன் Zeddy Will 5 பெண்கள், அவர்களின் குழந்தைகளை பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்து விட்டதாக தாங்கள் நம்புவதாகவும் கர்ப்பவதிகள் தெரிவித்துள்ளனர்.
Leave Comments