எக்ஸிநோஸ் 1480 சிப்செட் (Exynos 1480 chipset) வசதியுடன் இந்த கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. தற்போது புளூடூத் SIG தளத்தில் SM-A556E என்ற மொடல் நம்பர் உடன் சாம்சங் கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த சாம்சங் கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த சாம்சங் கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். சாம்சங் கலக்ஸி ஏ55 அம்சங்கள் (Samsung Galaxy A55 specifications): 6.5-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display ) வசதியுடன் இந்த சாம்சங் கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். தரமான எக்ஸிநோஸ் 1480 சிப்செட் (Exynos 1480 chipset) வசதியுடன் இந்த கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். இந்த சாம்சங் கலக்ஸி ஏ55 போனுக்கு Xclipse 530 GPU கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கமரா அமைப்புடன் இந்த சாம்சங் கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. Awesome Iceblue, Awesome Lilac, and Awesome Navy நிறங்களில் இந்த சாம்சங் கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் அறிமுகமாகும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. 5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த சாம்சங் கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த போனில் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது. புளூடூத் 5.4 (Bluetooth 5.4) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன். இதுதவிர 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும்.
Leave Comments