வாட்ஸ்அப் டவுன்லோடு ஆப்சனில் சென்று ஆட்டோமேட்டிக் டவுன்லோடு ஆப்சனை ஆஃப் செய்து வைப்பது. தேவையில்லாத ஸ்டோரேஜ் வீணாவதை தவிர்க்கலாம்.
2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் செயலி இன்று வரை உலகம் முழுவதும் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வேலை, படிப்பு, தகவல்களைப் பகிர்தல் போன்ற விஷயங்களுக்கு வட்ஸ்அப் மிகவும் முக்கியமானதாகி விட்டது. அதுமட்டுமன்றி போட்டோஸ், வீடியோஸ், பைல்ஸ் என்று பலவற்றை நொடியில் பரிமாற இந்தச் செயலியை பலரும் உபயோகப்படுத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே வட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ரோய்டில் ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு அன்லிமிடெட் `பேக்கப்'களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கூகுள் சமூக மேலாளர் ஜேமி, ஆண்ட்ரோய்டில் இலவச அன்லிமிடெட் பேக்அப்பை வழங்குவதை வட்ஸ்அப் நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அதனால் இனி வட்ஸ்அப் சேட் மற்றும் மீடியா பேக்-அப், கூகுளின் 15ஜிபி கிளவுட் ஸ்டோரேஜை பயன்படுத்திக்கொள்ளும் எனத் தெரிகிறது. மேலும், இந்த மாற்றம் நடப்பு டிசம்பர் 2023 முதல் வட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும், 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருந்து அனைத்து ஆண்ட்ரோய்டு பயனர்களுக்கும் மெதுவாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர் பிரபுகிருஷ்ணா, “ஆண்ரோய்ட் போனில் வட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் கூகுள் டிரைவ் மூலம் சேட் பேக்கப் செய்யும்போது, அதை அன்லிமிட்டெடாக செய்துகொள்ள கூகுள் அனுமதித்து வந்தது. ஆனால், தற்போது அது நம் கூகுள் (ஜிமெயில்) அக்கவுண்டின் சேமிப்பு அளவான 15ஜி.பி-குள் வந்துவிடும் என்று அறிவித்திருப்பது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும், கூகுள் ( ஜிமெயில்) அக்கவுண்டில் ஸ்பேஸ் இருக்கும் வரை வாட்ஸப் சேட் பேக்கப் ஆவதில் எந்த பிரச்னையும் இருக்காது. இது 15ஜி.பி-ஐ விட அதிகமாகும் பட்சத்தில் நமக்கு புதிய மெயில்கள் எதுவும் வராமல் போக வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் நாம் பழைய மெயில்களை அழித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை உருவாகும். மேலும் வாட்ஸ் அப் சேட்களை பேக்கப் செய்ய இயலாது. இதை சரி செய்ய, ஸ்டோரேஜ் ஃபுல் ஆனதும் வட்ஸ்அப் சாட்களை டெலிட் செய்து அதை குறைக்கலாம் அல்லது பணம் கட்டி கூகுள் ஸ்டோரேஜ் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். வட்ஸ்அப் டவுன்லோடு ஆப்சனில் சென்று ஆட்டோமேட்டிக் டவுன்லோடு ஆப்சனை ஆஃப் செய்து வைப்பது. தேவையில்லாத ஸ்டோரேஜ் வீணாவந்த் தவிர்க்கலாம். மேலும், தேவையில்லாத சேட் ஹிஸ்ட்ரியை அவ்வப்போதே டெலிட் செய்வதன் மூலமும் ஸ்டோரேஜ் ஃபுல் ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்" என்றார்.
Leave Comments